வியாழன், 17 செப்டம்பர், 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள்திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!
A R REhmans reply to fatwa
A R REhmans reply to fatwa
மெசஞ்சர் ஆஃப் காட் என்ற  ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர், ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையை சேர்ந்த’ ரஸா அகாடமி ‘ என்ற சன்னி முஸ்லிம் அமைப்பு ஃபத்வா விடுத்தது.லிரான் ஒரு ஷியா நாடு, இருப்பினும் இஸ்லாத்தை காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இன்றைய நாட்களில், சுன்னி நாடுகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்க்ஜள், அவர்களது மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுதுள்ள தீவிரவாத இயக்கங்களும் சுன்னி ஆதரவு கோஷ்டிகளாக உள்ளன. ஐ.எஸ் / ஐசிஸ் போன்றவையும் ஷியா-விரோத இயக்கங்களாக இருக்கின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு சுன்னி அமைப்பு பத்வா கொடுத்துள்ளது வினோதமாக இருக்கிறது. மேலும் ரஹ்மான் போன்ற கலைஞர்களை இஸ்லாமிய அடிப்படவாதத்தில் சுருக்கிவிடும் வகையில் இந்த மிரட்டல் உள்ளது. சூபித்துவத்தில் பற்று கொண்ட ரஹ்மான் இஸ்லாத்தை பக்தியுடன் அணுகியுள்ளார். அவர் ஒரு சிறந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, அவரை சுன்னி-ஷியா சர்ச்சகளில் சிக்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை.
Mohammed-messenger of god - a sceneஏ.ஆர். ரஹ்மானின் பொருட்செறிவு மிக்க பதில்: இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரஹ்மான் தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஃபத்வாவிற்கு பதிலளித்துள்ளார்[1]டாங்கிலத்தில் உள்ள அவரது பதிலை ஒவ்வொரு இந்திய முஸ்லிம், ஏன், இந்துவும் கூட படித்து அதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை[2]. இது எனது தனிப்பட்ட விஷயம்என கூறியுள்ளார்[3][அதாவது ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவேளை ஆன்மிகமாக உணர்வதற்கு, காணுவதற்கு பல சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை பற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவை ஒருவேளை உருவம் கொடுப்பது போன்ற நிலை ஏற்பட்டு விட்மோ என்ற அச்சம் தேவையில்லை என்று எடுத்துக் காட்டுகிறார்].

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03
Ranbir-Kapoor-In-Rockstar-concert-03
முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?ரஹ்மான் தொடர்லகிறாற், “ராஸா அமைப்பின் தலைவரான  நூரி , ‘இது போன்ற  படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லைஎன அல்லா என்னிடம் கேட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிலளித்துள்ள ரஹ்மான்[4], ”இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை  சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?”. கடைசிநாளில், உயித்தெழும் போது, அல்லா அவரவருக்கு ஏற்றபடி தீர்ப்பு கொடுப்பார், அந்நாளில், அல்லா அப்படி ஒருவேளை கேட்டால்…………..என்று ரஹ்மான் கேட்டுள்ளதில், அவரது ஆழ்ந்த பக்தி, இறையுணர்வு, அசைக்கமுடியாத நம்பிக்கை, அல்லாவை காணத்துணிக்கும் துடிப்பு என்று எல்லாமே வெளிப்படுகிறது. இசையால் இறைவனைக் காணத்துடிக்கும், அப்பக்தனின் ஏக்கமும் புரிகிறது. அத்தகைய கலைஞனை மிரட்ட வேண்டிய தேவையே இல்லை.  

A R Rahman sufism
A R Rahman sufism
எல்லோரும் அமைதியாக, சந்தோஷமாக இருப்போம்: ரஹ்மான் தொடர்கிறார், “நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது[5]. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்[6]. மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது, அதற்காக நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறோம்[7]. இங்கே எல்லா சமூகங்களும் குழப்பம் மற்றும் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம்[8]. நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல. இந்த உலகத்திற்காகவும், எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, அந்நாட்டை ஆசிர்வதிக்கவும், நாம் இதயப்பூர்வமாக மன்னிப்புக்காக வேண்டுவோம், அதுதான் மிக உயர்ந்த மற்றும் ஞானம் இவற்றின் தன்மை கொண்ட மதொப்பிக்குரிய மொஹம்மதை (PBUH) இறைஞ்சுவதாகும்‘, இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்[9]. அவரது உருக்கமான பதில் எல்லா ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது[10]. இதைவிட, ஒரு முஸ்லிம் என்ன சொல்லவேண்டும் என்று ராஸா அகடெமி எதிர்பார்க்கிறது?
A R Rahman sufism experiences felt
A R Rahman sufism experiences felt
ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்: மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற அந்த அமைப்பு முகமது: மெஸஞ்சர் ஆஃப் காட் படத்திற்கு இசையமைத்தற்காக விடுக்கப்பட்ட ஃபத்வாவில் புனிதப்படுத்தும் கலீமா உறுதி மொழியை மீண்டும் எடுக்க வேண்டுமென்றும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி , ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தது. சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றி திரைப்படம் எடுப்பதே மிகவும் தவறானது என்று அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது[11]. இந்த நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று, தன் முயற்சிகளால் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் உலக அரங்கில் புகழ் ஈட்டித்தந்துள்ள ரஹ்மான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பக்க பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்.
ar-rahman-fatwa-reply-true muslim
ar-rahman-fatwa-reply-true muslim
ரஹ்மான் தாய்மதம் திரும்பவேண்டும்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே[12]. அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது[13]. வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறியதாவது[14], “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல. எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்”, இவ்வாறு சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[15]. இந்துக்களுக்கு, ஒருவேளை அத்தகைய நிலை சிறிது சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ரஹ்மான் இதே நிலையில் உள்ளவரை, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முஸ்லிம்களில் நிறைய பேர் ஷிரிடி சாய்பாபா, புட்டபர்தி சாய்பாபா மற்ற இஸ்லாமிய பாபாக்கள் முதலியோரை நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்க்கலாம். ஆனால், சூபித்துவத்தில் ஊறிய அம்மனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்படி ஒரு இந்து அல்லாவை ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்தை ஒதுக்கலாமோ, அந்நிலை தான் அது.
வேதபிரகாஷ்
© 17-09-2015
[1] விகடன், ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்?, Posted Date : 12:08 (15/09/2015); Last updated : 12:08 (15/09/2015).
[2] “I am not a scholar of Islam. I follow the middle path and am part traditional and part rationalist. I live in the Western and Eastern worlds and try to love all people for what they are, without judging them,” said the double Grammy winner.
[3] நக்கீரன், நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்; யாரையும் புண்புடுத்துவது எனது நோக்கமில்லை: .ஆர்.ரஹ்மான், பதிவு செய்த நாள் : 15, செப்டம்பர் 2015 (19:30 IST);மாற்றம் செய்த நாள் :15, செப்டம்பர் 2015 (19:30 IST).
[4] தினமணி, ஃபத்வா குறித்து .ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம், By DN
First Published : 15 September 2015 11:46 AM IST.
[5] தமிழ்.இந்து, நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்: ‘ஃபத்வாவிதித்த அமைப்புக்கு ரஹ்மான் அழுத்தமான பதில், Published: September 15, 2015 11:02 ISTUpdated: September 15, 2015 12:20 IST.
What, and if, I had the good fortune of facing Allah, and He were to ask me on Judgement Day: ‘I gave you faith, talent, money, fame and health… why did you not do music for my beloved Muhammad film? A film whose intention is to unite humanity, clear misconceptions and spread my message that life is kindness, about uplifting the poor, and living in the service of humanity and not mercilessly killing innocents in my name’,” he continued.
[8] Rahman bats for religious freedom in India, “We are indeed fortunate and blessed to live in a country like India where religious freedom is practiced and where the aim of all communities is to life in peace and harmony sans confusion and violence.”
[9] “Let us set a precedent in clearing conflict with grace and dignity and not trigger violence in words or actions. Let us pray for forgiveness, and from our hearts bless those who suffer in the world and bless the country that we live in. To so pray is to reflect the noble and enlightened nature of our beloved Muhammad,” the musician concluded.
[12] தமிழிந்து, .ஆர்.ரஹ்மானின்கர்வாப்ஸி’-க்கு உகந்த நேரம் இதுவே: வி.எச்.பி., Published: September 16, 2015 17:34 ISTUpdated: September 16, 2015 17:34 IST
[13] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் Posted by: Sakthi Kumar Published: Wednesday, September 16, 2015, 22:50 [IST].